மனித வாழ்வுக்கு அச்சுறுத்தலானதே பயங்கரவாதம்; விஜயதாச

மனித வாழ்வுக்கு அச்சுறுத்தலானதே பயங்கரவாதம்; விஜயதாச

பயங்கரவாதம் நாட்டில் எப்போது உருவாகுமென்பதை ஜோதிடர்களால் கணித்து கூறமுடியாது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் உள்ளது.

அந் நாடுகளில் பயங்கரவாதம் உள்ளதா? ஆனால் அங்கு சட்டம் அமுலில் உள்ளது.

பயங்கரவாதம் எப்போது உருவாகுமென்பதை ஜோதிடர்களால் கணித்து கூறமுடியாது.

பயங்கரவாதம் தேசிய பாதுகாப்பு மற்றும் மனித வாழ்வுக்கு அச்சுறுத்தலான விடயம்.

எனவே, அதனை ஒடுக்குவதற்கு கட்டுப்படுத்துவதற்கு அரசு தயாராக இருக்க வேண்டும்.

அவ்வாறு இல்லாவிட்டால் அத்தகையதொரு அரசு இருந்து பயன் இல்லை.

புதிய பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எவரேனும் எதிர்ப்பெனில் எமக்கு இரு மாற்று வழிகள் உள்ளன.

ஒன்று, தற்போதுள்ள சட்டம் சிறந்ததெனக் கூறி அதனை தக்க வைத்துக் கொள்ள முடியும்.

இரண்டாவதாக, சிறந்த யோசனை இருப்பின் அது தொடர்பில் எம்மிடம் கூறலாம். அது பற்றி பரிசீலிக்கலாம் எனவும் தெரிவித்தார்.

CATEGORIES
Share This