நாட்டில் உழைக்காமல் வாழும் கூட்டமே மகிந்த ராஜபக்சவின் குடும்பம்

நாட்டில் உழைக்காமல் வாழும் கூட்டமே மகிந்த ராஜபக்சவின் குடும்பம்

நமது நாட்டில் உழைக்காமலே வாழுகின்ற ஒரு கூட்டமே மஹிந்த ராஜபக்சவின் கூட்டம் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அக்கரப்பத்தனை பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த இராதாகிருஷ்ணன்,

பொருளாதார நெருக்கடியால் இருக்கின்ற எமது நாட்டிற்கு முதலீட்டாளர்களை தடுக்கும் வகையில் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் செயல்பட்டு வந்துள்ளது. ஆகையால் தான் நாட்டுமக்கள் கோட்டபாய ராஜபக்சவையும் மஹிந்த ராஜபக்சவையும் மக்கள் விரட்டினார்கள்.

ஆனால் அவர்களை பாதுகாப்பதற்காக தற்பொழுது பரமாத்மா ஒருவர் வந்துள்ளார். அவர்தான் தற்போதுள்ள ரணில் விக்ரமசிங்க. அவர் நல்லாட்சி காலத்தில் நல்லவராக இருந்தார் இந்த ஆட்சியில் மோசமானவராக உருவெடுத்து இருக்கிறார்.

ஊழல் செய்துள்ள 134 பேரையும் பாதுகாப்பதற்கு அந்த பரமாத்மா அங்கு சென்றுள்ளார். நாட்டில் யுத்தம் இடம்பெற்ற போது தமிழர்களை அடக்குமுறைக்கு கொண்டுவரப்பட்ட ஒரு சட்டம்தான் இந்த பயங்கரவாத தடைச் சட்டம் அந்த காலத்தில் சிங்களவர்களுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது இன்று அந்த சட்டம் மாறுபட்டு உள்ளது.

இந்த பயங்கரவாத சட்டத்தின் ஊடாக ஒரு நபர் கைது செய்யப்பட்டால் ஒரு வாரம் அல்லது இரண்டு வருடங்களுக்கு தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள காவல்துறைஉயர் அதிகாரிகளுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த பயங்கரவாத தடைசட்டத்தை தமிழ் முற்போக்கு கூட்டணி முழுமையாக எதிர்க்கிறது.

இனிவரும் காலங்களில் அரசாங்கத்தையும் ரணில் விக்ரமசிங்கவையும் எவரும் விமர்சிக்க முடியாது நாட்டுக்கு நல்ல சட்டங்கள் நடைமுறைப்படுத்தினால் அதனை நாம் வரவேற்போம் பாதிப்புக்கு உள்ளான சட்டங்கள் வந்தால் அதனை எதிர்து செயல்படுவோம் என குறிப்பிட்டார்.

CATEGORIES
Share This