

இலங்கையில் பொருளாதார மையங்களின் முக்கியத்துவம்
இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட கடன் அனுமதியைப் பெற முடிந்தது. கடந்த ஆண்டு நாடு எதிர்கொண்ட கடினமான பொருளாதார நிலைமை காரணமாக, இலங்கை தனது கடனை செலுத்துவதை நிறுத்த வேண்டியிருந்தது. காரணம் எதுவாக இருந்தாலும், சர்வதேச நாணய நிதியம், பாரிஸ் கிளப்பின் உறுப்பினர்கள் மற்றும் பிற கடன் வழங்குநர்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் நாட்டின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்கும் செயல்முறையை எதிர்காலத்தில் செயல்படுத்த இலங்கை எதிர்பார்க்கிறது. வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பது ஒரு சிக்கலான செயல்முறையாகும். இது இவ்வாறிருக்கையில் சமீபகாலமாக அரசியல் ஆய்வாளர்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வருவது பொருளாதார சீர்திருத்த செயல்முறை மற்றும் பொருளாதார மையங்களின் முக்கியத்துவம் ஆகும்.
அந்த வகையில் மேல்மாகாணத்தில் உள்ள பொருளாதார மையங்களின் முக்கியத்துவம் குறித்து பார்ப்போமேயானால் பொருளாதார மையங்கள் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார முகாமைக்கான அடிப்படையை வழங்குகின்றன. 2020 இல் சேவை நடவடிக்கைகளின் அடிப்படையில் மேல் மாகாணம் 39.6 சதவீத பங்களிப்பைப் பதிவு செய்துள்ளது. கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மூன்று மேல் மாகாண மாவட்டங்கள் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 42.6 சதவீதத்தை (2021) வழங்குகின்றன. கொழும்பு துறைமுகம், உலகின் இருபத்தைந்து சிறந்த துறைமுகங்களில் ஒன்று, கொழும்பு துறைமுக நகரம், காலி முகத்திடலுக்கு அருகாமையில் அமைந்துள்ள உலக வர்த்தக மையம், இலங்கை வங்கியின் தலைமையகம், ஹில்டன் ஹோட்டல், ஷங்ரிலா கட்டிடங்கள் மற்றும் லோட்டஸ் டவர் இலங்கையின் பொருளாதார மையங்களாகக் கருதப்படுகின்றன. அத்தகைய சொத்துக்களைப் பாதுகாப்பதற்கு ஒரு தேசிய மூலோபாயம் பின்பற்றப்பட வேண்டும். மேலும் பண்டாரநாயக்க சர்வதேச மற்றும் ஏற்றுமதி செயலாக்க வலயம் கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ளது. அத்துடன் இலங்கை பெற்றோலிய களஞ்சியசாலை மற்றும் கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையம் போன்ற பொருளாதார மையங்களும் இம்மாவட்டத்தில் அமைந்துள்ளன. எனவே இந்த சொத்துக்கள் எதிர்கால சந்ததியினருக்கு முக்கியமானதாக இருக்கும். மேலும் இந்த உள்கட்டமைப்பு தேசிய செழுமைக்கான நிலையான சூழலை வழங்குகிறது. ஒரு பொருளாதார சீர்திருத்தம் செயல்படுத்தப்படும்போது பெறக்கூடிய அல்லது இழக்கக்கூடிய தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சொத்துக்களைப் பாதுகாப்பது கடமையாகும். நடுத்தர மற்றும் பெரிய அளவிலான கைத்தொழில்கள் முக்கியமாக கம்பஹா மாவட்டத்தில் காணப்படுகின்றன.
கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மேல்மாகாண மாவட்டங்களின் பொருளாதாரத்தில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் (SMEs) முக்கிய பங்கு வகிக்கின்றன. இலங்கையின் முக்கியமான ஏற்றுமதி பயிர்களான தேயிலை மற்றும் இறப்பர் மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் பயிரிடப்படுகின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மத்திய மாகாணம் 11 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. விக்டோரியா கொத்மலை மற்றும் ரன்தெனிகல அணைக்கட்டுகள் மற்றும் நீர்த்தேக்கங்கள், மிகப்பெரிய மகாவலி நீர்மின் உற்பத்தியின் பொருளாதார மையங்கள், இந்த மாகாணத்திலும் அதைச் சுற்றியும் அமைந்துள்ளன. ஒரு தேசத்தைக் கட்டியெழுப்பும் செயல்பாட்டில் அந்த உள்கட்டமைப்பு எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது என்பது முக்கியமானது.
வங்காள விரிகுடாவில் 103 எண்ணெய் தாங்கிகளுடன் திறக்கப்படும் உலகின் ஐந்தாவது ஆழமான இயற்கை துறைமுகமான திருகோணமலை துறைமுகம், இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மையமாக உள்ளது. மேலும் அம்பாந்தோட்டை துறைமுகம் இலங்கையின் தென் மாகாணத்தில் அமைந்துள்ள மற்றொரு பாதுகாப்பு மற்றும் பொருளாதார மையமாகும், இது புவிசார் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்தியப் பெருங்கடல் எல்லையில் ஒரு முக்கியமான கப்பல் பாதைக்கு அருகில் அமைந்துள்ளது.
முக்கியமான பொருளாதார மையங்களைப் பாதுகாக்க பல காரணிகளைப் பயன்படுத்தலாம். சில சந்தர்ப்பங்களில், நிதி நிர்வாகக் கொள்கைகள் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்புச் செயல்பாட்டில் முக்கிய புள்ளிகளைப் பாதிக்கலாம். இலங்கையின் பொருளாதாரத்தில் வெளிநாட்டு முதலீடு ஒரு இன்றியமையாத காரணியாகும். வெளிநாட்டு முதலீடுகள் சில சமயங்களில் இந்த பொருளாதார முட்டுக்கட்டைகளை உயர்த்த உதவுகின்றன. உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும், செயல்பாட்டில் வேலைகளை உருவாக்குவதற்கும் மூலதனத்தை வழங்குவதன் மூலம் நாடு அதன் பொருளாதார திறனை அடைய உதவுகிறது.
ஒவ்வொரு முறையும் இந்த பொருளாதார மையங்கள் முற்றிலும் புதிய சந்தை வாய்ப்பை உருவாக்குகின்றன. அரசாங்கத்தின் மிக உயர்ந்த முன்னுரிமையானது, அதிக மதிப்புள்ள மிக முக்கியமான தேசிய சொத்துக்களுக்கு ஏதேனும் ஒரு வகையான பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். புவி-அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்பாட்டில் முக்கியமானவை. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்கள், விமான நிலையங்கள், எண்ணெய் தாங்கிகள் மற்றும் மையத்தளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.