

2022-23 நிதியாண்டில் திருப்பதியில் ரூ.1,520 கோடி உண்டியல் வருமானம்!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆண்டு உண்டியலில் மாதந்தோறும் ரூ.100 கோடிக்கு மேல் பக்தர்கள் காணிக்கை செலுத்தியுள்ளனர்.
கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை ரூ.2.37 கோடி பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர். அவர்கள் உண்டியலில் ரூ.1,450 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். கடந்த 2021ஆம் ஆண்டில் (ஜனவரி முதல் டிசம்பர் வரை) 1.04 கோடி பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
உண்டியலில் காணிக்கையாக ரூ.833.41 கோடி செலுத்தினர். 2022-23 நிதி யாண்டின் படிகடந்த மார்ச் மாதம் வரை உண்டியல் வருமானம் ரூ.1,520.29 கோடி கிடைத்துள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
CATEGORIES இந்தியா