பீகாரில் ராம நவமி ஊர்வலத்தின் போது கலவரம்!

பீகாரில் ராம நவமி ஊர்வலத்தின் போது கலவரம்!

பீகாரில் நடந்த ராம நவமி ஊர்வலத்தின் போது கலவரம் ஏற்பட்டது. நாலந்தா மற்றும் சசரம் பகுதிகளில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை உருவானது. ரோத்தாஸ் மாவட்டம் சசரம் பகுதியில் நடந்த ஊர்வலத்தின் போது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

கல்வீச்சு மற்றும் வன்முறை சம்பவம் நிகழ்ந்தன. அதைத்தொடர்ந்து குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 6 பேர் காயம் அடைந்தனர். குண்டு வெடித்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல நாலந்தா மாவட்டம் பீகார்ஷெரீப் பகுதியில் நடந்த ஊர்வலத் தின்போதும் மோதல் ஏற் பட்டது. இதில் ஒருவர் பலியானார். 6 பேர் காயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து கலவரம் நடந்த 2 பகுதிகளிலும் பொலிசார் குவிக்கப்பட்ட னர். வன்முறை தொடர்பாக 80 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This