

வெடுக்குநாறிமலை கோவில் விவகாரத்தில் பொறுமை வேண்டுமாம்; அறிவுரை கூறும் டக்ளஸ்
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் கோவில் விவகாரத்தில் பொறுமையை கடைப்பிடிக்கவேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வெடுக்குநாறி மலைக்கு இன்று கள விஜயம் மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த ஆலயம் தொடர்பில் நீதிமன்ற தீர்ப்பது வழங்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு மதிப்பளிக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
இதனால், இந்த ஆலயத்தை இன்றைய தினம் பார்வையிடுவதற்காக மாத்திரம் வருகை தந்ததாகவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த விடயம் தொடர்பில் கொழும்பில் ஜனாதிபதி தலைமையில் விரிவான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதுடன், அதன்மூலம் சுமூகமான இணக்கப்பாடு எட்டப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
CATEGORIES செய்திகள்