குடும்ப பரம்பரை அரசியலுக்கு முற்றுப்புள்ளி; அடுத்த மாதம் புதிய அரசியல் கட்சி!

குடும்ப பரம்பரை அரசியலுக்கு முற்றுப்புள்ளி; அடுத்த மாதம் புதிய அரசியல் கட்சி!

அடுத்த மாதம் புதிய அரசியல் கட்சியை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

பதுளை வெலிகம ஹோட்டலில் நடைபெற்ற 43வது பிரிவின் பணிகளின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் புதிய கட்சி குறித்து தெரிவித்தார்.

அடுத்த மே மாதம், நாட்டில் புதிய அரசியல் கட்சி ஸ்தாபிக்கப்படும், ஏனெனில் இந்த நாட்டை இந்த திவால் நிலையிலிருந்து காப்பாற்ற, தகுதி அடிப்படையிலான அரசியல் கட்சி தேவை.

மேலும், குடும்ப பரம்பரை அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This