வடகொரியாவுக்கு உணவு வழங்கி ஆயுதங்களை பெறும் ரஷ்யா – அமெரிக்கா குற்றச்சாட்டு

வடகொரியாவுக்கு உணவு வழங்கி ஆயுதங்களை பெறும் ரஷ்யா – அமெரிக்கா குற்றச்சாட்டு

சர்வதேச நாடுகளின் பொருளாதார தடைகள் மற்றும் இயற்கை பேரழிவுகள் காரணமாக வடகொரியாவில் கடுமையான உணவு பஞ்சம் நிலவி வரும் சூழலில், ரஷ்யா வடகொரியாவுக்கு உணவு பொருட்களை வழங்கி அதற்கு ஈடாக ஆயுதங்களை பெற முயற்சிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு கொள்கையின் செய்தி தொடர்பாளர் ஜான் கெர்பி கூறுகையில்,

“வடகொரியாவுக்கு ஒரு பிரதிநிதிகள் குழு அனுப்ப ரஷ்யா முயல்கிறது என்பதையும், ஆயுதங்களுக்கு ஈடாக உணவு பொருட்களை ரஷ்யா முடிவு செய்திருப்பதையும் நாங்கள் அறிந்துள்ளோம். வடகொரியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான எந்தவொரு ஆயுத ஒப்பந்தமும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறக்கூடியது ஆகும். ஒப்பந்தத்தின் நிலைமையை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது” என்றார். எனினும் இதுகுறித்து வடகொரியா மற்றும் ரஷியா உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

CATEGORIES
TAGS
Share This