இந்தியாவின் கொரோனா நிலவரம்!

இந்தியாவின் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,995 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

பாதிப்பு கடந்த 28ஆம் திகதி 1,573 ஆக இருந்தது. மறுநாள் 2,151, நேற்று முன்தினம் 3,016, நேற்று 3,094 ஆக இருந்தது. இந்நிலையில் 2 நாட்களுக்கு பிறகு பாதிப்பு இன்று 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 765 பேர், மகாராஷ்டிராவில் 425 பேர், குஜராத்தில் 338 பேர், கர்நாடகாவில் 286 பேர், டெல்லியில் 240 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 47 லட்சத்து 18 ஆயிரத்து 781 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 1,840 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 71 ஆயிரத்து 551 பேர் குணமடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை நேற்றை விட 1,146 அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி 16,354 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

CATEGORIES
TAGS
Share This