சித்து இன்று விடுதலை!

சித்து இன்று விடுதலை!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் கடந்த 1988ஆம் ஆண்டு கொலை வழக்கில் சிக்கினார்.

வீதியில் காரை நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் குர்ணாம்சிங் என்பவரை நவ்ஜோத்சிங் சித்து தாக்கினார். படுகாயம் அடைந்த குர்ணாம்சிங் உயிரிழந்தார்.

இந்த வழக்கில் நவ்ஜோத்சிங் சித்துக்கு பஞ்சாப் உயர்நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சித்து உச்ச நீதிமன்றில் மேல் முறையீடு செய்தார். பல ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் உச்சநீதிமன்றில் தீர்ப்பு வழங்கியது. இதில் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து உத்தர விட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்ட பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே தண்டனை காலம் வருகிற மே 16ஆம் திகதி வரை உள்ள நிலையில் நன்னடத்தை காரணமாக முன்கூட்டியே நவ்ஜோத்சிங் சிறையில் இருந்து விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

CATEGORIES
TAGS
Share This