கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டவர்கள் மகிந்தவுடன் கூட்டு

கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டவர்கள் மகிந்தவுடன் கூட்டு

கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்க தலைவர்கள் உட்பட இருபது பேரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்துள்ளார்.

விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.

எரிபொருள் விநியோகத்தை சீர்குலைக்கும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டமைக்காக இவர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்னர்.

இதேவேளை, கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ள பெற்றோலிய தொழிற்சங்க தலைவர்கள் ஐவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கலந்துரையாடல் ஒன்றையும் கோரியுள்ளனர்.

CATEGORIES
Share This