வரலாற்றில் இன்று – ஏப்ரல் 01 : இலங்கை இனக்கலவரம் – கொழும்பு நகரில் தமிழில் எழுதப்பட்ட பெயர்ப்பலகைகள் மீது தார் பூசப்பட்டன – 1958

வரலாற்றில் இன்று – ஏப்ரல் 01 : இலங்கை இனக்கலவரம் – கொழும்பு நகரில் தமிழில் எழுதப்பட்ட பெயர்ப்பலகைகள் மீது தார் பூசப்பட்டன – 1958

1826 – சாமுவேல் மோரி உள் எரி பொறிக்கான காப்புரிமம் பெற்றார்.

1867 – சிங்கப்பூர் பிரித்தானியக் குடியேற்ற நாடாகியது.

1873 – அட்லாண்டிக் என்ற பிரித்தானியாவின் நீராவிக் கப்பல் கனடாவில் நோவா ஸ்கோசியாவில் மூழ்கியதில் 547 உயிரிழந்தனர்.

1924 – இராணுவப் புரட்சியில் ஈடுபட்ட குற்றத்திற்காக கிட்லருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. ஆனாலும் ஒன்பது மாதங்களில் அவர் விடுதலையானார்.

1933 – ஜேர்மனியில் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்சிகள் யூத வணிக நிறுவனங்களைப் புறக்கணிக்குமாறு ஒரு-நாள் எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தினர்.

1933 – ஆங்கிலேய துடுப்பாட்ட வீரர் வால்ட்டர் அமொண்ட் 336 நியூசிலாந்துக்கு எதிரான தேர்வுப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 336 ஓட்டங்களைப் பெற்று சாதனை படைத்தார்.

1935 – இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்டது.

1937 – ஏடன் பிரித்தானியாவின் குடியேற்ற நாடானது.

1939 – எஸ்ப்பானிய உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததாக இராணுவத் தலைவர் பிரான்சிஸ்கோ பிராங்கோ அறிவித்தார். கடைசி குடியரசுப் படையினர் சரணடைந்தனர்.

1941 – ஈராக்கில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அப்துல்லாவின் அரசு கலைக்கப்பட்டது.

1944 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கா தவறுதலாக சுவிட்சர்லாந்தின் சாபாசான் நகர் மீது குண்டுகளை வீசியது.

1945 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படையினர் ஜப்பானின் ஒக்கினாவா தீவுகளில் இறங்கித் தாக்குதலை ஆரம்பித்தனர்.

1946 – அலூசியன் தீவுகளில் நிகழ்ந்த 8.6 அளவு நிலநடுக்கம் காரணமாக அவாய் தீவுகளில் ஆழிப்பேரலை ஏற்பட்டு 157 பேர் உயிரிழந்தனர்.

1948 – பரோயே தீவுகள் டென்மார்க்கில் இருந்து தன்னாட்சி பெற்றது.

1949 – சீன உள்நாட்டுப் போர்: மூன்றாண்டுகள் சண்டையின் பின்னர், சீனக் கம்யூனிஸ்டுக் கட்சி தேசியவாதக் கட்சியுடன் நடத்திய பேச்சுகள் தோல்வியில் முடிந்தன.

1955 – சைப்பிரசில் கிரேக்கத்துடன் இணையும் நோக்கோடு பிரித்தானிய ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சி ஆரம்பமானது.

1957 – இந்தியாவில் 1 நயா பைசா நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.

1958 – இலங்கை இனக்கலவரம், 1958: கொழும்பு நகரில் தமிழில் எழுதப்பட்ட பெயர்ப்பலகைகள் மீது தார் பூசப்பட்டன.

1960 – டிரோசு-1 என்ற செயற்கைக்கோள் முதலாவது விண்வெளியில் இருந்து முதலாவது தொலைக்காட்சிப் படிமத்தை பூமிக்கு அனுப்பியது.

1970 – அமெரிக்காவில் தொலைக்காட்சி, வானொலிகளில் 1971 ஜனவரி 1 முதல் புகைத்தலுக்கான விளம்பரங்களைத் தடை செய்யும் சட்டத்தை அரசுத்தலைவர் ரிச்சர்ட் நிக்சன் அறிவித்தார்.

1971 – வங்காளதேச விடுதலைப் போர்: வங்காளதேசத்தில் பாகிஸ்தான் இராணுவம் 1,000 பொதுமக்களைப் படுகொலை செய்தது.

1973 – புலிகள் பாதுகாப்புத் திட்டம் இந்தியாவின் ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவில் தொடங்கப்பட்டது.

1976 – ஆப்பிள் நிறுவனம் ஸ்டீவ் ஜொப்ஸ், ஸ்டீவ் வாஸ்னியாக், ரொனால்டு வைன் ஆகியோரால் கலிபோர்னியாவில் தொடங்கப்பட்டது.

1979 – ஈரான் 99% மக்களின் ஆதரவான வாக்களிப்பின் மூலம் ஓர் இஸ்லாமியக் குடியரசாகியது. ஷாவில் அரசு முடிவுக்கு வந்தது.

1981 – சோவியத் ஒன்றியத்தில் பகலொளி சேமிப்பு நேரம் முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டது.

1997 – ஏல்-பாப் வால்வெள்ளி பூமியின் சுற்றுப்பாதை வீச்சைக் கடந்தது.

1999 – நூனவுட் கனடாவின் பிராந்தியமானது.

2001 – போர்க்குற்றங்களுக்காகத் தேடப்பட்டுவந்த யூகொசுலாவியாவின் முன்னாள் அரசுத்தலைவர் சுலோபதான் மிலோசெவிச் காவல்துறையினரிடம் சரணடைந்தார்.

2001 – நெதர்லாந்து ஒருபால் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய முதலாவது நாடானது.

2004 – கூகிள் நிறுவனம் ஜிமெயில் என்ற இலவச மின்னஞ்சல் சேவையை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தியது.

2006 – ஈரான் மேற்கில் லோரிஸ் டான் மாகாணத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 66 பேர் உயிரிழந்தனர்.

CATEGORIES
TAGS
Share This