

பயங்கரவாத தடைச் சட்டத்தினால் மக்கள் பாதிப்பு; ஒத்துக் கொண்டார் அமைச்சர் டக்ளஸ்!
கடந்த காலத்தில் பயங்கரவாத தடைச் சட்டம் என்பது, கடந்த காலத்தில் இனப்பிரச்சினை இருந்தபோது அதனால் பாதிக்கப்பட்டது ஒரு பகுதி மக்கள் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம்(31) பூநகரி பிரதேச செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆனால் தற்போதைய சட்டமானது நாடு தழுவிய ரீதியில் நாட்டு மக்களுக்கான ஒரு சட்டமாகத்தான் கொண்டுவரப்படுகிறது. இதில் மதவாதமோ அல்லது இனவாதமோ இருக்காது.
ஆனால் இதுவும் இன்னமும் ஒரு முடிவாக எடுக்கப்படவில்லை. இது நாடாளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டு நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் தான் சட்டமாக்கப்படும் – என்றார்.
CATEGORIES செய்திகள்