எனக்கு பதவி வேண்டாம்; தேவையெனில் ரணில் தருவார்

எனக்கு பதவி வேண்டாம்; தேவையெனில் ரணில் தருவார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியை ஏற்குமாறு கட்சி உறுப்பினர்கள் சிலர் அழுத்தம் பிரயோகித்து வருவதாக தெரியவந்துள்ளது.

எனினும் மஹிந்த ராஜபக்ச அதற்கு பெரிய அளவில் விரும்பவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

தனக்கு ஒரு தேவை என்றால் அதனை நிறைவேற்றி வைப்பதற்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் தயாராக இருக்கும் நிலையில் பதவி ஏற்கும் தயார் நிலையில் அவர் இல்லை என தெரியவந்துள்ளது.

அத்துடன் அரசாங்கத்திற்கு அவசியமான நேரத்தில் ஆலோசனை வழங்குவதற்கும் மகிந்த ராஜபக்ச தயாராகவே உள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்வாறான சூழலில் பிரதமர் பதவியை ஏற்பதில்மகிந்த ராஜபக்சவுக்கு மிகப்பெரிய அளவில் ஆர்வம் இல்லை என பொது ஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
Share This