வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச நீதி கோரி நல்லூரில் கவனயீர்ப்பு போராட்டம்!

வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச நீதி கோரி நல்லூரில் கவனயீர்ப்பு போராட்டம்!

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் இன்று(31) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்துக்கு முன்னால் இந்தப் போராட்டம் இன்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றது.

இதன்போது, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ் வேண்டாம், இழப்பீடு வேண்டாம், காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம் வேண்டாம், சர்வதேசமே உரிய தீர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.

CATEGORIES
Share This