

பிலிப்பைன்சில் கப்பலில் தீ விபத்து – பலி எண்ணிக்கை 31 ஆக அதிகரிப்பு (UPDATE)
பிலிப்பைன்சில் கப்பலில் தீ விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.
இதில் 250க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்தக் கப்பல் பலுக் தீவு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கப்பலில் தீ வேகமாக பரவியதால் அலறிய பயணிகள் பலர் கடலில் குதித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த கடலோர காவல்படை கடற்தொழிலாளர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
கப்பலில் இருந்து 230 பயணிகளை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். கப்பலில் எரிந்த தீயை அணைக்க கடலோர காவல் படை கப்பலில் இருந்து தண்ணீர் அடிக்கப்பட்டது. இந்த விபத்தில் 6 குழந்தைகள் உட்பட 31 பேர் பலினாகினர். காணாமல் போன 7 பேரை தேடி வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. பயணிகள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 31 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.