

அமெரிக்கர்கள் உடனடியாக ரஷ்யாவிலிருந்து வெளியேற வேண்டும் – அமெரிக்க வெளியுறவு அமைச்சர்
அமெரிக்கர்கள் உடனடியாக ரஷ்யாவிலிருந்து வெளியேற வேண்டும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ரஷ்யாவில் வசிக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற வேண்டும். ரஷ்ய பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது என பதிவிட்டுள்ளார்.
போர்ச்சூழலை பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையைச் சேர்ந்த ஈவான் கெர்ஷ்கோவிச் என்ற நிருபரை ரஷ்யா கைது செய்துள்ளது. இதுபற்றி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளது. நிருபரின் உயிர்பாதுகாப்பு பற்றி கவலை தெரிவித்து உள்ளது. ரஷ்யாவின் மத்திய பாதுகாப்பு துறை எனப்படும் எப்.எஸ்.பி. என்ற உளவு அமைப்பு வெளியிட்ட செய்தியில், யெகாடரீன்பர்க் மாகாணத்தில், உரால் மலைப்பிரதேச பகுதியில் வைத்து வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை நிருபர் கைது செய்யப்பட்டார். அமெரிக்க தரப்பு உத்தரவின்படி ஈவான் செயல்பட்டு, ரஷ்ய இராணுவத்தின் தொழில் வளாகத்தில் உள்ள நிறுவனங்களில் ஒன்றின் செயல்பாடுகள் பற்றி ரகசிய தகவல்களை சேகரித்துள்ளார் என தெரிவித்துள்ளது. இந்த தகவலை வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதனை அல்-ஜசீரா செய்தி நிறுவனமும் உறுதி செய்துள்ளது.