

கொலம்பியாவில் கொரில்லாத்தாக்குதலில் 9 இராணுவத்தினர் பலி!
கொலம்பியாவின் வடகிழக்கில் எல். கார்மன் என்ற ஊரக பகுதியில் அமைந்து உள்ள இராணுவ தளம் மீது இந்த கொரில்லா குழுக்கள் திடீர் தாக்குதல் நடத்தியது.
இந்த சம்பவத்தில் 9 இராணுவ வீரர்கள் மரணம் அடைந்துள்ளனர். தவிரவும், 9 வீரர்கள் காயம் அடைந்தனர். இதனை கொலம்பியா இராணுவம் வெளியிட்ட செய்தி குறிப்பு உறுதிப்படுத்தி உள்ளது.
இந்த வீரர்கள் நார்தே டி சான்டாண்டர் மாகாணத்தில் உள்ள எண்ணெய் ஆலையை பாதுகாக்கும் பணிக்காக ஈடுபட்டு இருந்தனர். இதனை தொடர்ந்து சம்பவ பகுதியில் நிலைமையை ஆய்வு செய்ய தேசிய இராணுவ தளபதி ஜெனரல் லூயிஸ் மொரீசியோ ஆஸ்பினா சென்றார். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கொலம்பியா அதிபர் கஸ்டாவோ பெட்ரோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைதி மற்றும் பொதுமக்களிடம் இருந்து தேசிய விடுதலை இராணுவ கொரில்லாக்கள் முற்றிலும் அந்நியப்பட்டு உள்ளனர் என அவர் டுவிட்டரில் கூறியுள்ளார்.