வட, கிழக்கில் சைவ கோவில்கள், சைவ மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் அவசர கலந்துரையாடல்

வட, கிழக்கில் சைவ கோவில்கள், சைவ மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் அவசர கலந்துரையாடல்

வடக்கு கிழக்கிலுள்ள சைவ சமையம் சார்ந்த அமைப்புக்கள், கோவில் தர்மகர்த்தாசபையினர், ஆதீன கர்த்தாக்கள், கோவில் நிர்வாகத்தினைச் சேர்ந்தவர்களுக்கான அவசர கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் மாலை 4 மணிக்கு நல்லை ஆதீனத்தில் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீல ஸ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்;த கூட்டத்திற்கு குறித்த அமைப்புக்களைச் சார்ந்த மூன்று பிரதிநிதிகளையும் தவறாது சமூகமளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

தற்போது வடக்கு, கிழக்குப் பகுதிகளில் சைவக்கோவில்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் மற்றும் சைவ மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் தொடர்பாக ஆராய்ந்து முக்கிய தீர்மானங்கள் எடுக்கவேண்டியுள்ளதால் குறிப்பிட்ட அமைப்புக்களைச் சார்ந்தவர்களை தவறாது சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This