காணி பிரச்சினைகளுக்கு தீர்வு; வடக்கு எம்பிக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள அமைச்சர்!

காணி பிரச்சினைகளுக்கு தீர்வு; வடக்கு எம்பிக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள அமைச்சர்!

வடக்கின் காணிப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு வடபகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்துக் கலந்துரையாடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு காணி அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ பணிப்புரை விடுத்துள்ளார்.

சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தலைமையில், அண்மையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரசாங்கத்தால் மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகளுக்கு காணி உரிமைப் பத்திரங்களை வழங்கும் செயற்பாட்டைத் துரிதப்படுத்துவதற்கு அமைச்சரவை மட்டத்திலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதுவரை வழங்கப்படாதுள்ள காணி உரிமைப்பத்திரங்களை விரைவில் வழங்கி முடிப்பதற்கு ஜனாதிபதி எதிர்பார்த்திருப்பதாகவும், பூர்த்தி செய்யப்பட்டுள்ள காணி உரிமைப் பத்திரங்களை விரைவில் வழங்குவது குறித்து முடிவெடுக்க இவ்வாரம் கூடவுள்ளதாகவும் காணி அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This