

புலஸ்தினி மகேந்திரன் உயிரிழந்துள்ளதாக மரபணு சோதனையில் உறுதி!
சாரா ஜெஸ்மின் எனப்படும் புலஸ்தினி மஹேந்திரன் உயிரிழந்துள்ளதாக மரபணு பரிசோதனை மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சாரா ஜெஷ்மின் என்ற புலஸ்தினி மஹேந்திரன், 2019 ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர், அதே மாதம் 26 ஆம் திகதி சாய்ந்தமருதில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் சம்பவத்தில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தற்கொலை தாக்குதல் சம்பவத்தில் 16 பேர் கொல்லப்பட்ட நிலையில் அதில் புலஸ்தினி மஹேந்திரனும் உள்ளடங்குவதாக மரபணு சோதனையில் உறுதியாகியுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னதாக புலஸ்தினி மஹேந்திரன் இந்தியாவுக்கு தப்பிச்சென்றார் என்று தகவல்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே காவல்துறை ஊடகப்பிரிவின் தகவல் வெளியாகியுள்ளது.
CATEGORIES செய்திகள்