சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு பரபரப்பு!

சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு பரபரப்பு!

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள உள்நாட்டு முனையம் வருகை பகுதியில் டிராலியில் கருப்பு நிற பை ஒன்று கேட்பாரற்று கிடந்தது.

இதை கண்காணிப்பு கேமராவில் கண்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை பொலிசார் உஷாராயினர். இதையடுத்து கேட்பாரற்று கிடந்ததால் வெடிகுண்டு இருக்குமோ என்ற பீதி நிலவியது.

இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் வீராவுடன் சம்பவ இடத்திற்கு வந்து பையை சோதனை செய்ததில், அதில் எதுவும் இல்லை. வெற்றுப் பையாக இருந்ததால் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

CATEGORIES
TAGS
Share This