கொரோனா தினசரி பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது!

கொரோனா தினசரி பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.

இம்மாத தொடக்கத்தில் தினசரி பாதிப்பு 200 என்ற அளவில் இருந்தது. பின்னர் படிப்படியாக உயர்ந்து நேற்று 1,573 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,151 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 28ஆம் திகதி நிலவரப்படி பாதிப்பு 2,208 ஆக இருந்தது. அதன் பிறகு 5 மாதங்கள் கடந்த நிலையில் இன்று பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது. நேற்று அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 450, கேரளாவில் 332, குஜராத்தில் 316, டெல்லியில் 214, கர்நாடகாவில் 135, தமிழ்நாட்டில் 105, இமாச்சலபிரதேசத்தில் 140 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 47 லட்சத்து 9 ஆயிரத்து 676 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 1,222 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 66 ஆயிரத்து 925 பேர். தினசரி பாதிப்பு நாள் தோறும் அதிகரித்து வருவதால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

CATEGORIES
TAGS
Share This