

வெடியரசன் கோட்டை தமிழரின் சொத்து; நெடுந்தீவில் கவனயீர்ப்பு போராட்டம்!
நெடுந்தீவு வெடியரசன் கோட்டைக்கு அருகில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று(29) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட அக்கட்சியின் அமைப்பாளர்கள் ஆதரவாளர்கள் என பலரும் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் போராட்டத்தையடுத்து அப்பகுதியில் பொலிஸாரும் புலனாய்வாளர்களும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
நெடுந்தீவு வெடியரசன் கோட்டையை பௌத்த விகாரையுடன் தொடர்புபடுத்தி கடற்படை அமைத்த பதாகையையடுத்து குழப்பம் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் தொல்லியல் திணைக்களம், கடற்படை ஆகியவற்றின் செயற்பாட்டை கண்டித்தும் வெடியரசன் கோட்டை தமிழரின் சொத்து என வலியுறுத்தியும் போராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES செய்திகள்