

கொழும்பில் இன்று ஒன்றுகூடவுள்ள பௌத்த அமைப்புகள்..!; தமிழர் பிரதேசங்களில் மீண்டும் சிக்கல்?
வடக்கு, கிழக்கு பௌத்த மரபுரிமைகளைப் பாதுகாப்போம்’ என்ற தொனிப்பொருளில், இன்று கொழும்பில் விசேட கூட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.
‘சாசனத்தைப் பாதுகாப்பதற்கான உலகளாவிய சிங்கள கூட்டமைப்பின்’ ஏற்பாட்டில், கொழும்பு – 07 இல் இந்த கூட்டம் நடத்தப்பட உள்ளதாக வட மாகாணத்தின் பிரதான பௌத்த தேரர், கல்கமுவே சந்தபோதி தேரர் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கில், பௌத்த மரபுரிமைகள் சேதமாக்கப்படுகின்றதாக குறிப்பிட்ட அவர், அவற்றைப் பாதுகாப்பதற்கு முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது ஆராயப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில், வடக்கு, கிழக்கு பௌத்த அமைப்புகள், பௌத்த பிக்குகள், பௌத்த அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
CATEGORIES செய்திகள்