

வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலய விக்கிரகங்கள் உடைப்புக்கு எதிராக நல்லூரில் கண்டன போராட்டம்!
நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தில் விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று(28) மாலை யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சைவ மகா சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சமயத் தலைவர்கள், அரசியல் தரப்பினர் ,பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.