வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயம் விரைவில் புனர்நிர்மாணம்; அமைச்சர் உறுதி

வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயம் விரைவில் புனர்நிர்மாணம்; அமைச்சர் உறுதி

இன – மத ரீதியான அடக்குமுறைகளுக்கு தற்போதைய அரசாங்கம் இடமளிக்காது என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி நகர பேருந்து நிலையத் திறப்பு விழாவில் உரையாற்றும் போதே குறித்த விடயத்தினை தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

துஸ்டர்களினால் சின்னாபின்னமாக்கப்பட்ட நெடுங்கேணி ஆதிசிவன் ஆலயத்தினை விரைவில் மீண்டும் அமைப்பது தொடர்பாக நேற்று இடம்பெற்ற அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதற்கு ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் ஆதரவு இருக்கிறது.

அமைச்சர் ஜீவன் தொண்டமானும் இந்த விடயத்தினை என்னோடு இணைந்து அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார் என அவர் மேலும் தெரிவித்தார்.

CATEGORIES
Share This