அரசு பங்களாவை விட்டு வெளியேறுகிறேன் – ராகுல்காந்தி

அரசு பங்களாவை விட்டு வெளியேறுகிறேன் – ராகுல்காந்தி

மோடி பற்றிய அவதூறு வழக்கில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதால். அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.

இதையொட்டி டெல்லியில் உள்ள அரசு பங்களாவை அடுத்த மாதம் (ஏப்ரல்) 22ஆம் திகதிக்குள் வெளியேறுமாறு மக்களவை செயலகம் அவருக்கு அறிக்கை அனுப்பியது.

இந்த உத்தரவை தொடர்ந்து அரசு பங்களாவை விட்டு வெளியேறுகிறேன் என ராகுல் காந்தி அறிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் மக்களவை செயலாளருக்கு இன்று அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

மக்களவை உறுப்பினர் என்ற முறையில் வழங்கப்பட்ட அரசு வழங்கிய பங்களாவை விட்டு நான் வெளியேறுகின்றேன். 4 முறை நான் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பொது மக்களுக்கு சேவையாற்றி உள்ளேன். 20 ஆண்டுகளாக அரசு பங்களாவில் இருந்த என்னுடைய மகிழ்ச்சியான தருணத்தை என்னால் என்றுமே மறக்க முடியாது. விதிமுறைகளுக்கு உட்பட்டு நான் நடக்கிறேன். இவ்வாறு ராகுல்காந்தி கூறி உள்ளார்.

CATEGORIES
TAGS
Share This