பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு நீட்டிப்பு!

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு நீட்டிப்பு!

கடந்த 2020ஆம் ஆண்டு பான்கார்டு மற்றும் ஆதார் கார்டு ஆகிய இரண்டையும் அனைவரும் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி கடந்தாண்டு மார்ச் 31ஆம் திகதி அதற்கு கடைசி நாளாக இருந்தது. இருப்பினும், நாட்டில் அப்போது நிலவிய கொரோனா சூழல் காரணமாக இந்த காலக்கெடு வரும் இந்தாண்டு மார்ச் 31ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டது. அவகாசத்திற்கு இன்னும் 3 நாட்களே இருந்த நிலையில் கூடுதல் காலக்கெடு நீட்டிப்பு வழங்கப்படுமா என கேள்வி எழுந்தது. இந்த நிலையில் பான்கார்டு மற்றும் ஆதார் கார்டு ஆகிய இரண்டையும் இணைப்பதற்கான காலக்கெடு மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. காலக்கெடுவே ஜூன் 30 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This