கடத்தல் வழக்கில் உ.பி. தாதாவுக்கு ஆயுள் தண்டனை!

கடத்தல் வழக்கில் உ.பி. தாதாவுக்கு ஆயுள் தண்டனை!

உத்தர பிரதேச மாநிலத்தில் 2006ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஆட்கடத்தல் வழக்கில் பிரபல தாதா அதிக் அகமது மற்றும் இரண்டு நபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து பிரயாக்ராஜ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

அதிக் அகமதுவின் சகோதரர் காலித் அசீம் என்ற அஷ்ரப் உள்ளிட்ட 7 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். உமேஷ் பால் என்பவரை கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ ராஜூ பால் கொலை வழக்கில் உமேஷ் பால் முக்கிய சாட்சி ஆவார். கடந்த பெப்ரவரி மாதம் இவர் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கொலை கடத்தல் உள்ளிட்ட சுமார் 100 குற்றவழக்குகளில் தொடர்புடைய அதிக் அகமது, அரசியலுக்கு வந்து எம்.பி. மற்றும் எம்எல்ஏ உள்ளிட்ட பதவிகளையும் வகித்துள்ளார். குற்ற வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற இவர் குஜராத் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடத்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டதால் குஜராத் சிறையில் இருந்து அதிக் அகமதுவை பிரயாக்ராஜ் நீதிமன்றத்திற்கு போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர்.

CATEGORIES
TAGS
Share This