

மெக்ஸிக்கோவில் ஏற்பட்ட தீ விபத்தில் 39 பேர் பலி!
மெக்ஸிக்கோவில் குடியேற்றவாசிகளின் தடுப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீயினால் 39 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவுடனான எல்லையிலுள்ள குடியேற்றவாசிகளுக்கான தடுப்பு நிலையமொன்றில் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக மெக்ஸிக்கோ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் வெளிநாடுகளைச் சேர்ந்த குடியேற்றவாசிகள் 39 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
CATEGORIES உலகம்