தமிழரசு கட்சியின் தலைவர் பதவியை ஏற்க நான் தயார்!

தமிழரசு கட்சியின் தலைவர் பதவியை ஏற்க நான் தயார்!

இலங்கை தமிழரசு கட்சியின் மாநாட்டிற்கு பின்னர் தான் யார் யார் எந்த எந்த பதவிகளில் வருவார்கள் என தெரிய வரும் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் பொறுப்பேற்கத் தயார் எனக் கூறியமை தொடர்பாக ஊடக செயலாளர் அனுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

அந்தப் பிரச்சினை எல்லோரிடத்திலும் எழுந்திருக்கவில்லை. தமிழரசு கட்சியின் உடைய மாநாடு அதையொட்டி அந்த கிளைகள் அமைக்கும் வேலைத்திட்டம் நடைபெறவுள்ளது.

அந்த மாநாட்டில் தான் யார் பொறுப்புக்கு வரவேண்டும், யார் வருவார்கள் என்பதனை நாங்கள் தீர்மானிப்போம். மத்திய குழுவுக்கு, யார் எந்தெந்த பகுதிக்கு வர விரும்புகின்றார்கள் என்ற அடிப்படையில் அந்த அமைப்பு விதியின்படி விண்ணப்பிப்பார்கள்.

அப்போது நாங்கள் இணக்க அடிப்படையில் அந்தந்த பதவிக்கு பொருத்தமான ஒவ்வொருவருடைய பெயரையும், அவர்களுக்குக்கு ஆதரிக்கும் நிலைமையை நாங்கள் ஆராய்ந்து நாங்கள் தீர்மானிப்போம் – என்றார்.

CATEGORIES
Share This