வெடுக்குநாறி சம்பவத்தின் பின்னணியில் அரசாங்கம்; மணிவண்ணன் குற்றச்சாட்டு

வெடுக்குநாறி சம்பவத்தின் பின்னணியில் அரசாங்கம்; மணிவண்ணன் குற்றச்சாட்டு

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் சேதமாக்கப்பட்ட சம்பவத்திற்கு அரசாங்கத்தின் பின்னணி இருப்பது தெளிவானது என்று யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்த செயற்பாட்டின் மூலம், முற்று முழுதாக மத பிரிவினைவாதத்தை ஏற்படுத்தி அதனூடாக சிலர் அரசியல் லாபத்தை அடைய எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சகலரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் வலியுத்தியுள்ளார்.

CATEGORIES
Share This