

சகல தொண்டு நிறுவனங்களும் வாருங்கள் ஒன்றிணைந்து செயற்படுவோம்
இலங்கையில் உள்ள 9 மாவட்டங்களிலும் செயற்படும் சகல தொண்டு நிறுவனங்களும் ஒன்றினைந்து செயல் பட முன்வரவேண்டும் என உதவும் கரங்கள் அமைப்பின் ஆர்.ராமேஸ்வரன் அறைகூவல் விடுத்தார்.
அவ்வாறு இணைந்து ஐந்து வருடங்கள் செயற்பட்டால், அனைத்து பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கையையும் மேம்படுத்த முடியும் என்றும் அவர்களுக்கு சமமான வாழ்க்கையை பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
தலா ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஐவரடங்கிய குழுவொன்றை நியமிக்கவேண்டும். அக்குழுவில் பெண்கள் இருவர் கட்டாயமாக அங்கம் வகிக்கவேண்டும். ஒன்பது மாவட்டங்களில் 45 ஆண்கள் 18 பெண்கள் அடங்கிய குழு அமைத்து அதன் மூலம் ஒரு நிறுவனத்தை உருவாக்கி அந்த நிறுவனம் ஊடாக எமது மலையக மக்கள் 15 லட்சம் பேருக்கு எம்மால் உதவி கரம் நீட்ட முடியும் என்றார்.
இன்று நாட்டில் 10 ரூபாய்க்கு ஒரு பொருளை கொள்வனவு செய்யமுடியாத நிலைமை தோற்றியுள்ளது. இருந்த போதிலும் 15 லட்சம் பேர் மலையக பகுதிகளில் உள்ளனர். இவர்களிடம் இருந்து தாலா 10 ரூபாய் சேகரிக்கும் பட்சத்தில் பல லட்சம் ரூபாய் நிதியை நமக்கு நாமே திரட்டிக்கொள்ளமுடியும்.
ஆகவே, அனைவரும் ஒன்றிணைந்து எதிர்வரும் ஏப்ரல் மாதம் புது வருடத்தில் இந்த நிறுவனத்தை உருவாக்கி செயல் படுவோம் என்றும் அழைப்பு விடுத்தார்.