ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் – 6 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் – 6 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் 6 பேர் பலியாகியுள்ளனர்.

ஆப்கான் தலைநகர் காபூலில் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் மாலிக் அசார் சதுக்கம் அருகே அமைந்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகம் நோக்கி உடலில் வெடிகுண்டுகளைக் கட்டிக்கொண்டு பயங்கரவாதி வந்துள்ளார்.

அந்த நபர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வருவதை அறிந்த பாதுகாப்புப் படையினர் அவர்மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்போது தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை பயங்கரவாதி வெடிக்கச் செய்தார். இந்த தற்கொலைப்படை தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 6 பேர் உயிரிழந்தனர்.

மேலும், பாதுகாப்புப் படையினர் உட்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சகம் அருகே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This