புதிய நீதித்துறை சீர்திருத்த சட்டத்தை நிறுத்தி வைக்க இஸ்ரேல் பிரதமர் ஒப்புதல்!

புதிய நீதித்துறை சீர்திருத்த சட்டத்தை நிறுத்தி வைக்க இஸ்ரேல் பிரதமர் ஒப்புதல்!

இஸ்ரேல் நீதித்துறையின் செயல்பாடுகள் மற்றும் அதன் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் நேதன்யாகு தலைமையில் பாராளுமன்றத்தில் புதிதாக சட்டம் கொண்டு முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

இந்தச் சட்டம் அமலாகும் பட்சத்தில் உச்சநீதிமன்றத்தின் அதிகாரம் குறையும். மேலும், நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறவும் இஸ்ரேல் அரசுக்கு அதிகாரம் வழங்கும். அதேபோல், நீதிபதிகள் நியமிப்பதிலும் அரசுக்கு அதிகாரம் வழங்கப்படும். இது நீதித்துறையை முடக்கும் செயல் எனக்கூறி இஸ்ரேலில் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

மக்கள் போராட்டங்களுக்கு பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. அந்த வகையில் போராட்டத்திற்கு டெல் அவிவ் விமான நிலைய ஊழியர்களும் ஆதரவு தெரிவித்து வேலையை புறக்கணித்தனர். இதனால் விமான சேவை பாதிக்கப்பட்டு டெல் அவிவ் விமான நிலையம் மூடப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை பொலிசார் தடுத்து நிறுத்தியதால் இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தண்ணீரை பாய்ச்சி அடித்தும் போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

ஆனாலும், நீதித்துறை மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலில் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இஸ்ரேல் பிரதமர் ஐசக் ஹெ ர்சாக் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய நீதித்துறை சீர்திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதை நிறுத்தி வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், புதிய நீதித்துறை சிர்திருத்தச் சட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஒப்புதல் அளித்தார். போராட்டக்காரர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

CATEGORIES
TAGS
Share This