மீண்டும் போராட்டம்: பெற்றோலிய விநியோகம் தடைப்படும் அபாயம்!

மீண்டும் போராட்டம்: பெற்றோலிய விநியோகம் தடைப்படும் அபாயம்!

பெற்றோலிய தொழில்சங்க ஒன்றியத்தினர் கொலன்னாவை பெற்றோலிய முனையத்துக்கு முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தைத் தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மகா சங்கத்தினரிடம் ஆசிபெற்றதன் பின்னர் இந்த சத்தியாக்கிரக போராட்டம் ஆரம்பமானது.

பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன், இந்த போராட்டத்தை மேலும் விரிபுபடுத்துவதற்கான சாத்தியம் காணப்படுவதுடன், இதனால் பெட்ரோலிய விநியோகம் தடைப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

CATEGORIES
Share This