தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த பணியாற்றி வருவதாக ஜனாதிபதி தெரிவிப்பு !!

தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த பணியாற்றி வருவதாக ஜனாதிபதி தெரிவிப்பு !!

யுத்தம் நிறைவடைந்த பின்னர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், பான் கீ மூனுக்கும் இடையில் எட்டப்பட்ட சில இணக்கப்பாடுகப்பாடுகளை நிறைவேற்ற தான் உறுதியாக இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்தோடு ஏற்கனவே தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த பணியாற்றி வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

ஹார்வட் பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் கடந்த வாரம் நடைபெற்ற நேர்காணலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நான் தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்துக்காக முன்நிறதால் தேர்தலில் தோல்வி கண்டதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடிவருவதாகவும் அதேவேளை புலம்பெயர் மக்களுடன் பேச்சு நடத்தவும் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This