மண் துறந்த புத்தருக்கு மண் மீது ஆசையா; யாழ்., பல்கலையில் கவனயீர்ப்பு போராட்டம்!

மண் துறந்த புத்தருக்கு மண் மீது ஆசையா; யாழ்., பல்கலையில் கவனயீர்ப்பு போராட்டம்!

வெடுக்குநாறி மலையில் இருந்த விக்கிரகங்கள் மற்றும் சூலங்கள் பிடுங்கி வீசப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் கவனயீர்ப்பு போராட்டம் சற்றுமுன் பல்கலைக்கழக முன்றலில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது மாணவர்கள் பதாகைகளை ஏந்தியவாறு ‘ IMF இடம் எடுப்பது பிச்சை தொடர்வது இன அழிப்பா, மண் துறந்த புத்தருக்கு மண்மீது ஆசையா, வெடுக்குநாறிமலை எங்கள் சொத்து, எமது நிலம் எமது உரிமை என கோஷமிட்டவாறு தமது எதிர்ப்பை வெளியிட்டு ஆர்ப்பாட்டம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This