

வெடுக்குநாறி மலை கோவில் சிலை உடைப்பு; சைவ மகா சபை கண்டனம்!
வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவில் சிலைகள் உடைக்கப்பட்டும் சிவலிங்கம் காணாமல் செய்யப்பட்ட செயலையும் சைவ மகா சபை வன்மையாக கண்டித்துள்ளது.
உடனடியாக காரணமானவர்கள் கண்டறியப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். சிவலிங்கமும் சிலைகளும் மீள நிறுவப்பட வேண்டும்.
ஏற்கனவே கடந்த காலங்களில் சைவ சமயத்தவர்களின் வழிபாட்டிற்கு பல இடையூறுகள் ஏற்படுத்தப்பட்ட பின்னணியில் மேற்படி சம்பவத்தை மத நல்லிணக்கத்திற்கு பாரிய ஊறு விளைவிக்கும் இச்செயலை உரிய நோக்கில் அரசு அணுகி தீர்வு காண வேண்டும்.
ஆதி சிவன் கோவில்கள் மீதான தொடர் விரும்பதகாத செயற்பாடுகள் சைவ மதத்தவர்களின் மனதை ஆழமாக பாதித்து வருகின்றது.
இந்த விடயத்தில் அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் செயலூக்கத்துடன் கூடிய எதிர்ப்பை வெளிகாட்ட வலியுறுத்துகின்றோம் என்றும் தெரிவித்துள்ளது.
CATEGORIES செய்திகள்