நாணய நிதிய உதவியை தடுக்க முயன்ற சஜித், அனுர

நாணய நிதிய உதவியை தடுக்க முயன்ற சஜித், அனுர

நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது, அந்த சவாலை அனுரகுமார திஸாநாயக்கவோ அல்லது சஜித் பிரேமதாசவோ ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் இவர்கள் வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து சர்வதேச நாணய நிதிய உதவியை தடுக்க முயன்றனர் என்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டுஉரையாற்றிய போதே பிரசன்ன ரணதுங்க இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிகையில்,

நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது, அந்த சவாலை அனுரகுமார திஸாநாயக்கவோ அல்லது சஜித் பிரேமதாசவோ ஏற்றுக்கொள்ளவில்லை. தினமும் நாடாளுமன்றத்தில் கூச்சல் போடுகிறார்கள். இவர்கள் தூதுவர்களை சந்தித்து ஐ.எம்.எப் உதவியை கொடுக்க வேண்டாம் என்று கூறினர்.

ஆனால், எங்களிடம் அரசியல் இல்லாததால் அதை செய்ய முடியாது என்று அந்த தூதுவர்கள் கூறினர். அப்படியானால் கடுமையான நிபந்தனைகள் போடுங்கள் என்றனர்.

நிபந்தனைகளை அமைப்பது யார்? வேறு யாருக்காகவும் அல்ல, அந்த நாட்டு மக்களுக்காக. ரணில் விக்கிரமசிங்க நாட்டின் சவாலை ஏற்றுக்கொண்ட தலைவர் என்பதாலேயே அவர்களுக்கு நிபந்தனையின்றி உதவுகிறோம்.

ஒரு வருடத்துக்குள் அதைச் செய்தார். எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்படும் இலக்கான 69 இலட்சத்துக்கு நாட்டைக் கொண்டு செல்வதற்கு நாங்கள் உறுதி பூண்டுள்ளோம் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This