மட்டக்களப்பு காந்தி பூங்காவில் பெண் ஒருவரின் சடலம் !

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் பெண் ஒருவரின் சடலம் !

மட்டக்களப்பு நகரில் உள்ள காந்திப்பூங்காவுக்கு முன்பாகவுள்ள வாவியில் பெண்னொருவரின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் குறித்த சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் பெண்ணின் மரணம் தொடர்பாக எந்தவித தகவலும் கிடைக்கவில்லையெனவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மரண விசாரணையை தொடர்ந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் பணிகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

CATEGORIES
Share This