வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‘எல்.வி.எம்3-எம்3

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‘எல்.வி.எம்3-எம்3

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2ஆவது ஏவுதளத்தில் இருந்து எல்.வி.எம்3-எம்3 ரொக்கெட் இன்று காலை 9 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதிக எடையை தூக்கி செல்லும் ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் ‘எல்.வி.எம்3-எம்3’ என்ற ராக்கெட்டை வடிவமைத்து உள்ளது.

இந்த ரொக்கெட் ‘ஜி.எல்.எஸ்.வி எம்.கே-3’ என்று அழைக்கப்பட்டது. இதில் ஒன்வெப் இந்தியா-2க்கான 36 செயற்கைகோள்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இங்கிலாந்தின் ஒன்வெப் செயற்கைகோள் நிறுவனத்தின் 36 செயற்கைகோள்களுடன் பூமியின் தாழ்வான வட்டப்பாதையில் இந்த ராக்கெட் ஏவப்படுகிறது. அப்போது தகவல் தொடர்பு செயற்கைகோள்கள் புவிசார் சுற்றுப்பாதையில் செலுத்தப்படும்.

இந்த 36 செயற்கை கோள்களின் மொத்த எடை சுமார் 5.8 டன்னாகும். எல்.வி.எம்3-எம்3 ரொக்கெட் 8 டன் எடை வரை தூக்கி செல்லும் திறன் கொண்டது. இதற்கான இறுதிகட்டப்பணியான 24 மணி நேரம் 30 நிமிடம் கவுண்ட்டவுன் நேற்று காலை 8.30 மணிக்கு தொடங்கியது.

CATEGORIES
TAGS
Share This