வடக்கு, கிழக்கில் பௌத்த மயமாக்கலை ஏற்படுத்துவது அரசின் திட்டம் இல்லை!

வடக்கு, கிழக்கில் பௌத்த மயமாக்கலை ஏற்படுத்துவது அரசின் திட்டம் இல்லை!

“தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மயமாக்கலை ஏற்படுத்துவது அரசின் திட்டம் இல்லை. இது தொடர்பில் அரசு மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அடியோடு நிராகரிக்கின்றேன்.” – இவ்வாறு பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் படைத்தரப்பினராலும் தொல்பொருள் திணைக்களத்தினராலும் முன்னெடுக்கப்படும் பௌத்த மயமாக்கல் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழரின் மத, பண்பாட்டு, கலாசார அடையாளங்களை அழிக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை.

தமிழரின் மத, பண்பாட்டு, கலாசார அடையாளங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் முன்வைத்துள்ள கருத்துக்கள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சு அதிக கவனம் செலுத்தும்” – என்றார்.

CATEGORIES
Share This