மிசிசிப்பி சூறாவளியில் சிக்கி 23 பேர் உயிரிழப்பு!

மிசிசிப்பி சூறாவளியில் சிக்கி 23 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் வீசிய சூறாவளியில் சிக்கி 23 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், நான்கு பேர் புயலில் சிக்கி காணாமல்போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் குறித்த பகுதியில் மீட்பு குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், தேடுதல் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும், அவசர மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆலபாமா, மிசிசிப்பி, மற்றும் டென்னசியில் ஒரு இலட்சத்திற்கும் குறைவான வாடிக்கையாளர்கள் மின்சாரத்தை இழந்துள்ளதாகவும், கூறப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This