கொரோனா பரவல் – மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

கொரோனா பரவல் – மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

இந்தியாவில் இன்று காலை 8 வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,590 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பாதிப்பு நேற்று முன்தினம் 1,300 ஆகவும், நேற்று 1,249 ஆகவும் இருந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது. கடந்த அக்டோபர் 30ஆம் திகதி நிலவரப்படி பாதிப்பு 1,604 ஆக இருந்தது.

அதன்பின்னர் 145 நாட்களில் இல்லாத அளவில் அதிகபட்ச தினசரி பாதிப்பு இன்று பதிவாகியுள்ளது. தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் அனுப்பியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This