வவுனியாவில் மினி சூறாவளி: பாரிய மரம் பாறி விழுந்ததில் பாடசாலை கட்டிடம் சேதம்

வவுனியாவில் மினி சூறாவளி: பாரிய மரம் பாறி விழுந்ததில் பாடசாலை கட்டிடம் சேதம்

வவுனியாவில் மினி சூறாவளியுடன் பெய்த மழை காரணமாக பாரிய மரம் ஒன்று பாறி விழுந்தமையால் காமினி மகா வித்தியாலயத்தின் வகுப்பறை கட்டிடம் ஒன்று சேதமடைந்துள்ளது.

வவுனியா நகரம் மற்றும் அதனையண்டிய பகுதியில் மினிசூறாவளியுடன் கூடிய மழை நேற்று (24.03) மாலை பெய்திருந்தது.

இதன்போது வவுனியா, மன்னார் வீதியில் உள்ள தமிழ், சிங்கள மாணவர்கள் கல்வி கற்கும் காமினி மகாவித்தியாலய வளாகத்தில் நின்ற பாரிய பாலை மரம் ஒன்று பாறி விழுந்தமையால் வகுப்பறை கட்டிடம் ஒன்றின் கூரைப் பகுதி உடைந்து சேதமடைந்துள்ளது.

இதேவேளை, குறித்த மினிசூறாவளி காரணமாக வவுனியாவின் பல பகுதிகளிலும் இவ்வாறான பாதிப்புக்கள் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This