தமிழர்களை கொன்றபோதும் பாற்சோறு: கடனை பெற்றபோதும் பாற்சோறு

தமிழர்களை கொன்றபோதும் பாற்சோறு: கடனை பெற்றபோதும் பாற்சோறு

யுத்ததில் தமிழர்களை கொன்று குவித்து வெற்றி கொண்டாடத்தில் வெடி கொழுத்தி பாற்சோறு வழங்கி மகிழ்ந்திருந்த சிங்கள மக்கள் இன்று கடன் பெற்றதற்காகவும் வெடி கொழுத்தி பாற்சோறு வழங்கி மகிழும் சிங்கள மக்களும் இந்த நாட்டின் வித்தியாசமான மனிதர்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இலங்கையை எடுத்து நோக்கினால் இலங்கை ஒரே ஒரு நாடாக உலகத்திலே காணப்படும் தங்களுடைய நாட்டினுடைய சக குடிமக்கள் கொல்லப்படும் பொழுது
கொத்துக்கொத்தாக இலங்கையிலே இருக்கும் பிரதிகள் அழிக்கப்பட்ட பொழுது அதை பார்த்து சந்தோசப்பட்டு வீதிகளிலே வெடி கொளுத்தி பால் சோறு சமைத்த மக்களும் இலங்கை மக்கள் தான்.

அதேபோன்று உலகத்திலேயே சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை கண்டு அதற்கு வெடி கொளுத்தி பால் சோறு சமைத்த மக்களும் இலங்கையில் இருக்கும் மக்கள் தான் அந்த அடிப்படையிலேயே இலங்கையில் வாழும் மக்கள் மிகவும் ஒரு வித்தியாசமானவர்கள் என்றே கூற வேண்டும் என இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This