யாழில் தொழிற்சங்க நடவடிக்கை வேண்டாம்! வசந்த முதலிகே உள்ளிட்ட குழு உடன் வெளியேறு!; ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய மக்கள்!

யாழில் தொழிற்சங்க நடவடிக்கை வேண்டாம்! வசந்த முதலிகே உள்ளிட்ட குழு உடன் வெளியேறு!; ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய மக்கள்!

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளின் யாழ்ப்பாண விஜயத்தை கண்டித்தும் யாழில் தொழிற்சங்க நடவடிக்கை வேண்டாம் என வலியுறுத்தியும் போராட்டமொன்று நடத்தப்பட்டது.

இன்று சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் யாழ் நகரில் ஒன்று கூடியவர்கள் தீடீரென பேரணியாக வந்து ரிம்மர் மண்டபம் முன்பாக ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது காணமல்போனோரை விடுதலை செய், அரசியல் கைதிகளை விடுதலை செய், வன்முறை வேண்டாம், யாழ்ப்பாணத்தை குழப்பாதே போன்ற கோஷங்களை எழுப்பினர்.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் யாழ்ப்பாணம் ரிம்மர் மண்டபத்தின் ஒன்றுகூடியபோதே குறித்த போராட்டம் இடம்பெற்றது.

CATEGORIES
Share This