

வரலாற்றில் இன்று – மார்ச் 25: இலங்கையைச் சேர்ந்த மு. நவரத்தினசாமி பாக்குநீரிணையை நீந்திக் கடந்து சாதனை புரிந்தார் – 1954
1802 – பிரான்சுக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையே “உறுதியான அமைதி உடன்பாடு” எட்டப்பட்டது.
1807 – அடிமை வணிகம் பிரித்தானியாவில் தடை செய்யப்பட்டது.
1807 – சுவான்சி-மம்பில்சு ரயில்வே என்ற உலகின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவை பிரித்தானியாவில் ஆரம்பமாகியது.
1811 – இறைமறுப்பின் தேவை என்ற பிரசுரத்தை வெளியிட்டமைக்காக பெர்சி பைச்சு செல்லி ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
1821 – ஓட்டோமான் பேரரசுக்கு எதிராக கிரேக்கர்கள் போராட்டத்தை ஆரம்பித்தனர். கிரேக்க விடுதலைப் போர் (யூலியன் நாள்காட்டியில் 1821 பெப்ரவரி 23 இல் ஆரம்பமானது.
1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வர்ஜீனியாவில், கூட்டமைப்புப் படைகள் இஸ்ட்டெட்மன் கோட்டையைத் தற்காலிகமாக அமெரிக்கப் படைகளிடம் இருந்து கைப்பற்றின.
1911 – நியூயோர்க் நகரில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற தீயில் சிக்கி 146 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
1918 – பெலருஸ் மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது.
1931 – இஸ்க்காட்பரோ சிறுவர்கள் அலபாமாவில் கைது செய்யப்பட்டு வன்கலவிக்காகக் குற்றம் சாட்டப்பட்டனர்.
1941 – இரண்டாம் உலகப் போர்: அச்சு அணி நாடுகள் அமைப்பில் யுகோசுலாவியா இணைந்தது.
1947 – அமெரிக்காவில் இலினோய் மாநிலத்தில் நிலக்கரிச் சுரங்கத்தில் இடம்பெற்ற வெடிப்பில் 111 பேர் உயிரிழந்தனர்.
1949 – எஸ்தோனியா, லாத்வியா, மற்றும் லித்துவேனியா ஆகியவற்றைச் சேர்ந்த 92,000 பேர் சோவியத் அதிகாரிகளினால் சோவியத் ஒன்றியத்தின் பல ஒதுக்கமான இடங்களுக்கு கட்டாய வேலைக்காக அனுப்பப்பட்டனர்.
1953 – ஆந்திர மாநில அமைப்பு பற்றிய அதிகாரப்பூர்வமான பிரகடனத்தை ஜவகர்லால் நேரு நாடாளுமன்றத்தில் வெளியிட்டார். ஆந்திரத் தலைநகர் ஆந்திர எல்லைக்குள்ளேயே அமையும் என அறிவித்தார்.
1954 – முதலாவது வர்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை ஆர்சிஏ நிறுவனம் வெளியிட்டது. (12″ திரையளவு, விலை: $1,000).
1954 – இலங்கையைச் சேர்ந்த மு. நவரத்தினசாமி பாக்குநீரிணையை நீந்திக் கடந்து சாதனை புரிந்தார்.
1957 – மேற்கு ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பேர்க் ஆகியவற்ற உறுப்பு நாடுகளாகக் கொண்ட ஐரோப்பிய பொருளாதார சமூகம் உருவாக்கப்பட்டது.
1965 – மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் தமது 4-நாள் 50-மைல் எதிர்ப்புப் பயணத்தை முடித்துக் கொண்டார்.
1971 – வங்காளதேச விடுதலைப் போர்: பாகிஸ்தான் இராணுவம் கிழக்கு பாகிஸ்தானுக்கு எதிரான தேடுதலொளி நடவடிக்கையை ஆரம்பித்தனர்.
1975 – சவூதி அரேபிய மன்னர் பைசால் தனது உளப் பிறழ்ச்சி கொண்ட மருமகனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1988 – செக்கோசிலோவாக்கியாவில் கம்யூனிச ஆட்சிக்கு எதிராக மெழுகுவர்த்திப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
1992 – சோவியத் விண்வெளிவீரர் செர்கே கிரிக்காலொவ் மீர் விண்வெளி நிலையத்தில் 10-மாதங்கள் தரித்திருந்துவிட்டு பூமி திரும்பினார்.
1996 – மாட்டுப் பித்தநோய் காரணமாக பிரித்தானிய மாட்டிறைச்சி மற்றும் அதன் துணைப் பொருட்களின் ஏற்றுமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்தது.